பண்ருட்டி :
பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கூறினார். பண்ருட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன் வாடகை பிரச்னையில் சூறையாடப்பட்ட கடை மற்றும் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மேற் கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றலில் பாதித்த கடைகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள் ளையன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
பூட்டிய கடையை நள் ளிரவில் சூறையாடிய சம் பவத்தில் ஈடுபட்டவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலைய கடைகள் மூலம் நகராட்சிக்கு அதிகம் வருமானம் கிடைக்கிறது. கடை வாடகைதாரர்கள் நிழலுக்காக கடைமுன் பாக நான்கடி கொட்டகை போடுவது வழக்கம். அதனை நகராட்சி நிர்வாகம் அராஜகமாக அகற்றியது கண்டிக்கத்தக்கது. பஸ்நிலையத்தில் சுகாதார வசதிகள் முற்றிலும் சீர்கெட்டு தூர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் வசதி, இலவச கழிவறை வசதி இல்லை. இதனை நிறைவேற்றிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றார். பேட்டியின் போது மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக