கடலூர் :
கடலூர் நகரில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள வரி நிலுவைத் தொகைக்காக அதிகாரிகள் முன்னிலையில் தண்டோரா போடப்பட்டது. கடலூர் நகராட்சியில் 10 கோடி ரூபாயிற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதனை வசூலித்திட நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வசூலை மேலும் தீவிரப்படுத்த கமிஷனர் குமார் மற்றும் வருவாய் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்று மஞ்சக்குப்பம் பகுதியில் வரி பாக்கி வைத்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன் தண்டோரா போடப்பட்டது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உடன் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், பில் கலெக்டர்கள் முத்துக்குமார் லட்சுமணன், சின்னப்பராஜ், மாகன் ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து வருவாய் அதிகாரிகள் தெரிவிக்கையில் "வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு முன்னறிவிப்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டோரா மூலமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காலதாமதம் ஆகும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக