நெய்வேலி:
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமை வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி தாளாளர் செல்வராஜ் தொடங்கிவைத்தார். முகாமின் போது இதய அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை, சிறுநீரகம், கருப்பை நோய்களுக்கு புதுச்சேரி பிம்ஸ் மருத்துமனை மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதில் 397 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பிம்ஸ் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா மற்றும் வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக