கிள்ளை :
சிதம்பரம் அருகே மிஷின் மூலம் அறுவடை செய்வதை நிறுத்தக்கோரி விவசாய சங்கத்தினர் திடீர் சாலைமறியல் செய்ததால் போக்குவரத்து தடைபட்டது. சிதம்பரம் அருகே பின்னத்தூர் சுற்றுப்பகுதியில் சம்பா நடவு செய்யப் பட்டது. தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் கூலியாட்கள் கிடைக் காததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆட்களில் கூலி உயர்வாலும், குறிப் பிட்ட நேரத்தில் ஆட்கள் கிடைக்காததாலும் விவசாயிகள் குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் அறுவடை வேலையை முடித்து வருகின்றனர். இதனால் விவசாய சங்கத்தினர் நேற்று ஒன்று கூடி சிவலிங்கம் தலைமையில் ஆண்கள், பெண்கள் கிள்ளை சிதம்பரம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட் டனர். மறியலில் ஈடுபட் டவர்களை தாசில்தார் காமராஜ் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு காணப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக