உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

கோவிலை திறக்கக்கோரி பொது மக்கள் திடீர் சாலை மறியல்

பண்ருட்டி : 

                பண்ருட்டி அருகே கோவிலை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய திடீர் சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பண்ருட்டி அடுத்த காட்டுகூடலூர் ஊராட்சியில்  அய்யனார், பிடாரி நொண்டிவீரன் கோவில்கள் உள்ளன.  இந்த கோவிலுக்கு சொந்தமாக இரண்டரை  ஏக்கர் நிலம் உள்ளது.  கோவில் மற்றும் நிலத்தை நிர்வகித்து வந்த சக்கரபாணி  பரம்பரை அறங்காவலராக  நியமிக்க இந்து சமய அறநிலையத்துறையில் மனு கொடுத்தார். இதில் விழுப்புரம் இணை ஆணையர் சக்ரபாணியின் மனுவை தள்ளுபடி  செய்து கோவிலுக்கு  செயல்அலுவலர் நியமனம் செய்து,  கோவில் முன்னாள்  நிர்வாகி சக்கரபாணியிடம் உள்ள அனைத்து பொறுப்புகளையும் அதிகாரிகள் ஏற்க உத்தரவிட்டார்.அதன்படி நேற்றுமுன்தினம்  கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், உதவியாளர் முத்து ஆகியோர் சக்கரபாணியிடம் பொறுப்புகளை ஒப்படைக்க கோரினர். ஆனால் அதற்கு  சக்கரபாணி ஒப்படைக்க முடியாது என மறுத்து கூறினார்.இதுகுறித்து  தாசில்தார் பாபு உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. கோவில் நிர்வாகத்தை உடனே அரசு பொறுப்பேற்க கூறி கோவில் அதிகாரிகளை சிறைபிடித்தனர். நேற்று காலை 11 மணியளவில் காட்டுகூடலூர்-விருத்தாசலம் சாலையில் ஊராட்சி மன்ற தலைவர் பாரிவள் ளல் தலைமையில் 150 பெண்கள் உள் ளிட்ட 300 பேர் கோவிலை உடனே பூஜைக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் செய்தனர்.இதுகுறித்து தகவலறிந்த முத் தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரபாபு, வருவாய் ஆய்வாளர்கள் சித்ரா, பூபாலன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் , தாசில்தார் உள் ளிட்டோர் வந்தால் தான் முடிவு ஏற்படும் என கூறினார். இதனால் பிற்பகல் 3 மணிவரை தீர்வு ஏற்படாமல் பஸ்போக்குவரத்து பாதித்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior