உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்குவது முதல்வரின் சாதனை திட்டம்: அய்யப்பன்

கடலூர் :  

                 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் மணி மகுடத்தில் வைரக்கள் பதித்தது போன்ற திட்டமாகும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் வில்வநகரில்  10 லட்ச ரூபாய் மதிப்பிலான சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, அங்கன் வாடி மையம் திறப்பு விழா நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். அங்கன்வாடி மையத்தை சேர்மன் தங்கராசு திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., அய்யப்பன் சமுதாயக்கூட அடிக்கள் நாட்டினார். விழாவில் துணைத் தலைவர் தாமரைச்செல்வன்,கமிஷனர் குமார், பொறியாளர்மனோகர் சந்திரன், பங்கேற்றனர். 

விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

                    முதல்வரின் சிறப்பான திட்டங்கள் நிறைவேற் றப்பட்டு வருவதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டாகும். இதுபோன்று அனைத்து பகுதிகளிலும் எங்களால் முடிந்த அளவுக்கு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
             கிராமப் புறங்களில் இலவச கலர் "டிவி' வழங்கி முடிக்கப்பட்டுள் ளது. இனி நகர் புறத்தில் வழங்கும் பணி தொடங்க உள்ளது.முதல்வர் கருணாநிதி ஆட்சியில், பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச கலர் "டிவி', காஸ் அடுப்பு, ஏழை மக்கள் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் என பல்வேறு சிறப்பு திட் டங்கள்  நிறைவேற்றப் பட்டுள்ளன.இவற்றிக்கெல்லாம் மேலாக மணி மகுடத்தில் வைரக்கல் பதித்தது போன்று, தமிழகம் முழுவதும் உள்ள குடிசை வீடுகளை ஆண்டுக்கு 3 லட்சம் வீடுகள் என படியாக  கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் முதல்வர் கருணாநிதியில் சாதனை திட்டமாக திகழ்கின்றது என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior