நெய்வேலி :
என்.எல்.சி., மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சேர்மன் அன்சாரி பேசினார். என்.எல்.சி., நிறுவனம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்கமும் இணைந்து நடத் திய இலவச கண் சிகிச்சை முகாம் என்.எல்.சி., பொது மருத்துவமனையில் நேற்று நடந்தது. முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். என்.எல்.சி., இயக்குனர்கள் சுரேந்தர்மோகன், கந்தசாமி, சேகர், பாபுராவ், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத் துவ குழு தலைமை டாக்டர் ஜெயகாயத்திரி முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்த என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசியதாவது:என்.எல்.சி., நிறுவனத்தின் சுற்றுப்புற மேம் பாட்டு பணிகளுக்காக நிறுவனம் ஒதுக்கீடு செய்யும் தொகை மேலும் உயர வேண்டுமெனில் நிறுவனம் முதலில் வளர்ச்சிடைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு பணியாளரும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். என். எல்.சி., மருத்துவமனையில் புதியதாக டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார். முகாமில் 700 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 88 பேர் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். என். எல்.சி., மருத்துவமனையின் டாக்டர்கள் வெங்கட்ராமன், சுப்ரமணியன், உஷா, வெண் மால் தேவி, தாரிணி, மவுலி, பாக்கியமேரி, சுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக