நெய்வேலி :
நெய்வேலி செயின்ட் பால் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி டவுன்ஷிப், பிளாக்-4ல் உள்ள செயின்ட் பால் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை பள்ளி நிர்வாகம் அமல்படுத்த மறுப்பதால் ஆசிரியர்கள் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்னையில் போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியும் பள்ளி நிர்வாகம் அமல்படுத்தவில்லை. அதனால் ஆசிரியர்கள் நேற்றும் தொடர்ந்து கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.ஆசிரியர்களுக்கு ஆதரவாக நேற்று மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து தர்ணா செய்தனர். ரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள் தொடங்கிவிட்ட சூழலில் இந்த போராட்டம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக