கடலூர் :
மத்திய அரசின் கதர் கிராம தொழில் ஆணையமும், கடலூர் மஞ்சக்குப்பம், சுசான்லி மருத்துவமனையும் இணைந்து மூலிகை தொழில் பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இப்பயிற்சிகள் வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 5 தினங்கள் நடக்கிறது.இம் முகாமில் மூலிகைகளின் வகை, தரம் தெரிந்து கொள்வது, இதர பற்பம், செந்தூரம், லேகியம், சூரணம் தயாரிப்பது செயல் முறை, மூலிகை தொழில் விற்பனை குறித்து 30 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுதவிர அழகு கலை பயிற்சியில் ஐபுரோ, ஹெர்பல் பிளீச்சிங், முடி உதிர்தல், மசாஜ், பேசியல் மற்றும் இதர அழகு சம்மந்தப் பட்ட பயிற்சி வகுப்புகள் பிப். 8ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பயிற்சி அளிக்கப் படவுள்ளது. இந்த பயிற்சிக்கு 15 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். தொழில் தொடங்கிட 15 முதல் 35 சதவீதம் வரை வங்கி மானியத்துடன் கடனுதவி பெறலாம். இது குறித்த முன்பதிவு மற்றும் விளக்கம் வேண்டுவோர் 93676 22256 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக