கிள்ளை:
சிதம்பரத்தில் இருந்து பள்ளிப்படை வழியாக கோவிலாம்பூண்டிக்கு இயக்கிய அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிதம்பரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அரசு பஸ்சில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் சிதம்பரத்தில் இருந்து கந்தமங்கலம் வழியாக கோவிலாம்பூண்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை.
காலை 8.30, மதியம் 1.30 மற்றும் மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து சென்ற தடம் எண். 9 அரசு பஸ்சை கடந்த சில மாதங்களாக நிறுத்தி விட்டனர். இதனால் கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் மற்றும் பள்ளிப்படையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் இயக்கிய பஸ்சுடன் கூடுதலாக பள்ளி நேரத்திற்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கோவிலாம்பூண்டி ஊராட்சி தலைவர் சிவசுப்ரமணியன், பள்ளிப் படை ஊராட்சி தலைவர் தனலட்சுமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் துரை ரத்தினவேல் மற்றும் பொதுமக்கள் தனித்தனியே அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக