உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

பேரிடர் தயார் நிலை, மேலாண்மைத்திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா

கடலூர்: 

           பேரிடர் தயார் நிலை மற்றும் மேலாண்மைத் திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா கடலூரில்  நடந்தது.

             நாணமேடு ஊராட்சி தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., முத்தையா முன்னிலை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார். சுனாமி மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கிராம மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகம் பயிற்சி நடத்தி வருகிறது. அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் 4 மாநிலமான தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஒரிசா ஆகிய கிராம பஞ்சாயத்துக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுனாமி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாணமேடு கிராமத்தை முன்னுதாரணமாக எடுத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

விழாவில் மேலாண் மைத்திட்ட கையேட்டை காந்திகிராம கிராம பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பழனிதுரை வெளியிட்டு பேசியதாவது:

            சுனாமியைத் தொடர்ந்து ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கையும், ஆக்ஷன் எய்ட் இந்தியா நிறுவனமும் புயல், மழை, வெள்ளம்  பேரிடர்களினால் பாதிக்கப்பட்டு வரும் மக்களை மீட்பு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்ட நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் நாணமேடு கிராமத்தை முன்மாதிரியாக தேர்வு செய்து செயல்பட பயிற்சி அளிக்கப் பட்டது. இக்கிராமத்தில் 5 குழுக் கள் உள்ளன.  

              பஞ்சாயத்து குழுக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர சமூக குழுக்களுக்கும் பேரிடர் தயார் நிலை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளில் ஒரு முன்மாதிரியாக செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் காலங்களில்  பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இத்திட்டம் உதவும்.இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் பழனிதுரை பேசினார். சத்யபாபு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior