உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

விருத்தாசலம் வட்டார "முந்திரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்'

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் வட்டார விவசாயிகள் ஒட்டு முந்திரி நடவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                விருத்தாசலம் வட்டாரத்தில் முந்திரியில் நெருக்கு நடவு மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு எக்டர் காலி நிலத்தில் 5க்கு 4 இடைவெளியில் 500 முந்திரி ஒட்டுச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.மொத்த மானியமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு எக்டருக்கு 32 ஆயிரத்து 850 ரூபாய்க்கு  வழங்கப்படுகிறது.

                 முதல் ஆண்டில் 19 ஆயிரத்து 710 ரூபாய்க்கு முந்திரி ஒட்டு செடிகள், இடுபொருட் கள், நடவு மற்றும் பராமரிப்பு செலவும், இரண்டாம் ஆண்டிற்கு 6,570 ரூபாய் மதிப்பிற்கும், மூன்றாம் ஆண்டிற்கு 6,570 ரூபாய் மதிப்பிற்கும் மானியம் வழங்கப்படுகிறது.ஆர்வமுள்ள விவசாயிகள் கம்யூட்டர் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ் போர்ட் சைஸ் புகைப் படத்துடன் துறை களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் தேவைப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இந்த பதிவேட்டில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior