சிறுபாக்கம்:
வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரி நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
நேரு இளைஞர் மன்றத் தலைவர் கணேஷ்ராம், கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு:
பெரியநெசலூர் ஊராட்சியில் விவசாயத்திற்கும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக விளங்கி வரும் பெரிய ஏரியாகும். இதனைச் சுற்றியுள்ள விளம்பாவூர், களத்தூர், குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி தூர்ந்து காணப்படுவதால் மழைக் காலங்களில் உடனுக்குடன் நீர் வெளியேறுவதால் ஏரி வறண்டு விடுகிறது. இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு அறுவடை காலத் திற்கு நீர் இல்லாமல் அவதியடைகின்றனர். ஏரியின் கண்மாய்கள் தூர்ந்துள்ளதால் அதிகளவு நீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே ஏரியை ஆழப்படுத்தியும், மதகுகள் மற்றும் கண் மாய்களை சீரமைத்துத் தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக