உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

கடலூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தலைவர் ஆவேசம் அதிகாரிகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு


கடலூர்: 

            ஊராட்சி மன்ற கூட்டத்தைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் கூறும் குறைகள் அவர்களுக்கு தெரியாமல் போகிறது என ஊராட்சி மன்றத் தலைவி சிலம்புச்செல்வி குற்றம் சாட்டினார். மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் கடலூரில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. தலைவி சிலம்புச் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) தர்மசிவம் மற்றும் கவுன்சிலர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: 

சிலம்புச்செல்வி: 

               முக்கிய விழாக்களுக்கு மாவட்ட கவுன்சிலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுப்பதில்லை. மேலும் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு திட்ட அதிகாரி மற் றும் உயர் மட்ட அதிகாரிகள் வருவதில்லை. தொடர்ந்து ஊராட்சி கூட்டங்களை அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். அதனால் மக்கள் பிரதிநிதிகள் கூறும் குறைகள் அவர்களுக்கு தெரியாமல் போகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் "அடுத்த கூட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவில்லையெனில் கூட்டத்தை நடத்தக்கூடாது' என கருத்து தெரிவித்தனர்.

மதியழகன் (தி.மு.க.,): 

               மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் பயிரிடப்படாத தரிசு நிலங்கள் மட் டுமே வீட்டு மனைகளுக்கு அனுமதிக்க வேண்டும். ஆனால் விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விவசாய விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதால் விளை நிலங்கள் குறைந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத் தக் கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு தெரியப் படுத்த வேண்டும்.

சிலம்புச்செல்வி: 

             மூன்று ஆண்டுகள் பயிரிடப்படாத தரிசு நிலங்களை தவிர்த்து மற்ற விளை நிலங்களில் வீட்டுமனை போடக்கூடாது. அப்படி போடப்பட்டுள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தி அதன் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். உடன் கவுன்சிலர்கள் "அடுத்த ஊராட்சி கூட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைக்க கூடாது' என்றனர்.

ராஜேந்திரகுமார் (தி.மு.க.,): 

                தவளக்குப்பம் வழியாக அரியாங்குப்பத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும். இப்பகுதி வழியாக சென்ற பஸ் தடம் எண்.26 நிறுத்தப்பட்டுள்ளதால் ரெட்டிச்சாவடி, அரியாங்குப்பம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

போக்குவரத்து அதிகாரி: 

               இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயகாந்தன் (அ.தி.மு.க.,):

             தற்போது மழைக் காலம் துவங்க உள்ளது என்பதால் ஏரி, குளம், வாய்க்கால் கரைகளை பலப்படுத்த காடு வளர்ப்பு திட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்களுக்கு தலா 10 ஆயிரம் மரக் கன்றுகளை கொடுத்தால் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.

வனத்துறை அதிகாரி: 

            எங்களிடம் மரக்கன்றுகள் கேட்டால் நிச்சயம் வழங்குவோம்.

சண்முகம் (பா.ம.க.,): 

            சிப்காட் பகுதியில் அடிக் கடி விபத்துக்கள் நடப்பதால் அங்கு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தற்போது விருத்தாசலம் வழியாகச் செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலையில் காரைக்காடு வழியாக செல்வதால் அதிக போக்குவரத்து காரணமாக தினமும் விபத்துகள் நடக்கிறது. அப்பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும். வீராணம், பெருமாள் ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து வருகிறது. 47 அடி ஆழமுள்ள வீராணம் ஏரி தற் போது 15 அடி ஆழம் மட்டுமே உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தை ஒட்டிய காவிரி ஆற்றின் கரையோர பகுதியை பலப் படுத்த மத்திய அரசு 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கரையை பலப்படுத்த வீராணம் மற்றும் பெருமாள் ஏரியில் மண் எடுக்க வேண்டும். இதனால் ஏரியும் தூர்வாரப்படும். மாவட்டத்தில் நிலத் தடி நீர் மட்டமும் உயரும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior