சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அடுத்த காணூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுண் டேஷன் தொண்டு நிறுவனம் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காணூர் துவக்கப் பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு ரிசோர்ஸ் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் வேளாங்கண்ணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெயசுந்தரி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மின்னல்கொடி நாராயணசாமி முகாமை துவக்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஜான் பிடரிக், கிருத்திகா தேவி மற்றும் பணியாளர்கள் ஜேன் ஆரோக்கியசாமி, கலைவாணன் ஆகியோர் கண் பரிசோதனையும், சிகிச்சையும் அளித்தனர்.நாராயணசாமி, அரிகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், கவிதா, செல்வன், தங்கசாமி, பன்னீர்செல்வம் ஆசிரியைகள் ஜெயராக்கினி, ஜூலியட் சங்கீதா பங்கேற்றனர்.முகாமில் 120 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 பேர் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். சிவக்குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக