உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

ஹட்சன் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. ஒப்பந்தம்

சிதம்பரம்:

          பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனமான ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் தங்களது கள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புல கால்நடை பராமரிப்புப் பிரிவுடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் கையெழுத்திட்டது.

            ஹட்சன் அக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் பால் சேகரிப்பு மற்றும் கறவை மாடுகளுக்கான தொழில்நுட்ப சேவைகளை அளித்து வருகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்தகைய களப்பணியாளர்களுக்கு விஞ்ஞான ரீதியிலான பால் உற்பத்தி வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப பயிற்சியை ஒருவார காலத்துக்கு தமிழில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அண்ணாமலைப் பல்கலை. கால்நடை பராமரிப்பு பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு பிரிவுக்கு இருபது களப்பணியாளர்கள் வீதம் 9 பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

              இந்த ஒப்பந்தத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஹட்சன் நிறுவன மனிதவள மேம்பாட்டு பொதுமேலாளர் ஆர்.நரசிம்மகண்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார், கால்நடை பராமரிப்பு பிரிவுத் தலைவர் ஆர்.விஜயலட்சுமி, ஹட்சன் நிறுவன கால்நடைப்பிரிவு மேலாளர் டாக்டர் எம்.முருகேசன், சட்டப்பிரிவு உதவி மேலாளர் ஆர்.ரோஸ்பிளசட்கிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior