கடலூர் :
கடலூர் நகரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.
கடலூர் நகரத்தில் பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் பிரேதங்களை எரித்து வருகின்றனர். இதனால் புகை மற்றும் துர்நாற்றம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனைத்தடுக்க மாநகராட்சிகளில் மின் தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக செலவுத் தொகை பிடிக்கும் என்பதால் குறைந்த செலவில் எரிவாயு தகன மேடையை மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். வட இந்தியாவில் பல நகராட்சிகளில் எரிவாயு தகன மேடை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேப்போல் கடலூர் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதிக மக்கள் தொகை இருப்பதால் கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றங்கரையிலும், மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றங்கரையிலும் எரிவாயு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி நிறைவடைந் துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக் காத வண்ணம் உள்ளூரில் மலிவாக கிடைக்கக் கூடிய கருவேல முள் செடியின் குச்சிகளைக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாய்லரில் போட்டு சூடேற்றும் போது உண்டாகும் "பயோ காஸ்' குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு தகன மேடையில் அமைக்கப் பட்டுள்ள 6 பர்னஸ் மூலம் அதிக வேகத்தில் எரியும் படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த "பயோ காஸ்' அதிக எரிதிறன் கொண்ட வாயு என்பதால் எளிதில் பிரேதத்தை புகை, துர்நாற்றமின்றி ஒரு மணிநேரத்தில் எரித்து சாம்பலாக்கி விடும். இதனை பராமரிப்பதற்காக ஆகும் செலவை அறக்கட்டளை மூலம் நிர்வகிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக நகராட்சி நிதி திரட்டி வருகிறது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் குமார் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் நகராட்சியில் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை பகுதிகளில் இரு நவீன தகன மேடைகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கெ õண்டுவரப்படவுள்ளது. இந்த எரிவாயு தகன மேடையை நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு அறக்கட்டளை பராமரிக்க உள்ளனர். இருப்பினும் பராமரிப்பு செலவுக்காக நிதி அதிக அளவில் தேவைப்படும். எனவே நகராட்சி நிர்வாக இயக்குனரின் அறிவுரைப்படி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்ட வேண்டி வங்கிக் கணக்கு தனியாக துவக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிக் கணக்கு நகராட்சியால் நிரந்தர வைப்பு நிதிக் கணக்காக ஆணையர், கடலூர் நகராட்சி நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்புக் கான பொது மக்களின் பங்குத் தொகை என்ற தலைப்பில் பரோடா வங்கி (எண் 12220100013082), கடலூர் கிளையில் பராமரிக் கப்படுகிறது. இவ்வைப்புத் தொகை நிரந்தரமாக இருக்க, அதன் மீதான வட்டித் தொகையின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிக்காக செலவிடப்படும். நல்ல உள்ளம் கொண்ட பொது மக்களின் பங்குத் தொகையினை மேற்படி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக