சிதம்பரம் :
சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பாசனத்திற்கு கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து ஒரு வாரமாகியும் வீராணம் ஏரி நிரம் பாமல் வற்றிய நிலையிலேயே உள்ளது.
கூடுதல் தண்ணீர் திறக்காத நிலை நீடித்தால் வடவாறு மற்றும் வீராணம் பாசனப் பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்குவது வீராணம். கோடை காலங்களில் தண்ணீர் வற்றி பாலைவனமாக மாறிவிடும். சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதையொட்டி கடந்த சில ஆண்டுகளாகவே வீராணம் வற்றாமல் கோடையிலும் தண்ணீர் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது பாசனத் திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் வீராணத்திற்கு தண்ணீர் விடாமல் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் அளவு மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 40 அடிக்கு குறைந்தது. ஏரி முழுவதும் பாசி, செடிகொடிகள் வளர்ந்து வறண்ட நிலையில் காணப்பட்டது. இருந் தும் சென் னைக்கு குடிநீர் எடுத்துச் செல் வது பாதிக்காத வகையில் தொடர்ந்து தண்ணீர் அனுப்பப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை மாவட்ட காவிரி கடைமடை பகுதி பாசனத்திற்கு கீழணையில் இருந்து 11ம் தேதி தண்ணீர் திறக்கப்பட் டது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தண்ணீர் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே வீராணம் நீர் மட்டம் உயரும். ஆனால் இம் முறை குறைவான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணத்தின் நீர்மட்டம் உயராமல் 41 அடி மட்டுமே தொடர்ந்து காணப்படுகிறது.
குறைந்தது 2,000 கன அடியாவது தண்ணீர் வந்தால் மட்டுமே 15 அல்லது 20 நாட்களில் வீராணம் ஏரியில் தண்ணீர் பாசனத்திற்கு கொடுக்கும் அளவிற்கு நிரம்பும். தற்போது கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையில் ஏரியில் எந்த மாற்றமும் இல்லாமல் வறண்ட நிலையே நீடிக்கிறது. இதே நிலையில் தண்ணீர் வந்தால் ஏரி நிரம்ப மாதக்கணக்கில் ஆகும் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே வீராணத்திற்குக் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் வடவாறு மற்றும் வீராணம் பாசன பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் கூறினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக