கடலூர் :
மகளிர் திட்டம் மூலம் தொழிற் திறன் பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டிற்கு 400 இளைஞர், இளம் பெண்களுக்கு தொழில்திறன் பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 36 வயதுக் குட்பட்ட இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செவிலியருக்கான உடனாள், கேட்டரிங், வெல்டர், எலக்ட்ரீஷியன், ஸ்டீல் பிட்டர் ஆகிய பயிற்சிகள் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
பயிற்சிகள் கடலூர், சிதம்பரம், வடலூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. நாளொன்றுக்கு 25 ரூபாய் வீதம் பயிற்சி காலத்தில் உதவித் தொகையாக வழங்கப்படும். தகுதி வாய்ந்தவர்கள் பெயர், முகவரியுடன் குறிப்பிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக