பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த பயிற்சி முகாமை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய மீன் அபிவிருத்தி வாரியம் நிதி உதவியுடன் கடல் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வணிகம் குறித்த பயிற்சி முகாம் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. புல முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்று பயிற்சி திட்டத்தின் விளக்கத்தையும், பயனையும் எடுத்துக் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் முகாமை துவக்கி வைத்து பயிற்சி கையேட்டினை வெளியிட்டார்.
முகாமின் நோக்கம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் விளக்கினார். ஓய்வு பெற்ற மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மைய இயக் குனர் தேவராஜ், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாமன்ற உறுப்பினர் செயலாளர் வின்சென்ட் பேசினர். இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறுவதற்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த 25 பயனாளிகள் பங்கேற்றனர். இணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக