உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

கடலூர் மாவட்டத்தில் மானிய விலையில் நெல் விதை

கடலூர்:
             கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் மானிய விலையில் விதைநெல் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
              2010-11-ம் ஆண்டுக்கு விவசாயிகளுக்குச் சான்று பெற்ற விதைநெல், கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படும். 10 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடியைக் குழுக்களாகச் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள, உழவர் வயல்வெளிப் பயிற்சிப் பள்ளிகள் நடத்தி ஒரு உழவருக்கு மானியம் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும். 30 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் பூச்சிநோய் கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளவும், பூச்சி மற்றும் நோய்த் தன்மை அறிந்து இயற்கை எதிரிகளை வயல்வெளிகளில் அழிக்காமல் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
                    இத்திட்டத்தின் மூலம் சிக்கனமான செம்மைநெல் சாகுபடி முறைகளை விவசாயிகள் கையாண்டு, அதிக மகசூல் பெறுவதே நோக்கம் ஆகும்.விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி அரசு வழங்கும் மானியங்களையும் பயிற்சிகளையும் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior