கடலூர்:
விடைத்தாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக 25 ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் நேற்று கடலூரில் கோரிக்கை முழக்க வாயிற் கூட்டம் நடத்தினர்.
மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி வாயிலில் நடந்த கூட்ட த்திற்கு தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நல்லமுத்து முன்னிலை வகித்தார். காமராஜ், செல்வி, காண்டீபன் சிறப்புரையாற்றினர். தேர்வுப்பணிகள் அனைத்தும் டயட் கல்வியாளர்களுக்கே வழங்கப் பட வேண்டும். விடைத் தாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக 25 ரூபாய் வழங்க வேண்டும். சிற்றுண்டிக்காக நாளொன்றுக்கு 50 ரூபாய் வழங்கிட வேண்டும்.
டயட் கல்வியாளர்களுக்கு எம்.பில்., பி.ஹெச் டி.,க்குண்டான ஊக்க ஊதியம் விரைந்து வழங்க வேண்டும். கல்வியாளர்களுக்கு பணி மூப்பு பட்டியல் விரைந்து வெளியிட வேண்டும். பணிச் சுமை, பயணக்களைப்பு போன்றவற்றை கவனத்தில் கொண்டு வேறுபட்ட மாற்றுப் பணிகளுக்கிடையே போதிய கால இடைவெளி வழங்க வேண்டும். தாள் திருத்தும் மையங்களில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கலியமூர்த்தி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக