உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் பேர்வழிகளுக்கு எச்சரிக்கை! குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

கடலூர்: 

              மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை பெற்றுத் தருவதாக கூறி செயல்படும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

               உடல் உறுப்புகளில் உள்ள குறைபாட்டினால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத் திற்காக தமிழக அரசு பல் வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. 

                   இந்த நலத்திட்ட உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகள் தமிழக அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வு வாரிய அட்டை நகல் மற்றும் உரிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் அறியாத மாற்றுத் திறனாளிகள் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனுக்களுடன் அங்கும் இங்குமாக அல்லாடி வருகின்றனர். இவ்வாறு மனுக்களுடன் அல்லாடும் மாற்றுத் திறனாளிகளிடம் இடைத் தரகர்கள் சிலர் அரசின் நலத்திட்ட உதவிகளை தான் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை ஏமாற்றி பணம் வசூலித்து வருகின்றனர். மேலும், அரசு அதிகாரிகளையும் மிரட்டத் துவங்கியுள்ளனர்.

                          இதுகுறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் முறைகேடுகளை தவிர்க்கவும், தகுதி உள்ளவர்களுக்கு விரைவாக வழங்கவும், நலத்திட்ட உதவிகள் பெற வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி வழங்கவும் முறைகேடாக செயல்பட்டால் நடவடிக்கை மேற்கொள் ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

                 மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 29 ஆயிரத்து 303 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், 10 ஆயிரத்து 473 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் மாற்று திறனாளிகள் விண்ணப்பத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை நகலை இணைத்து கொடுத்தால் போதுமானது. இடைத்தரகர்களை நாடி ஏமாற வேண்டாம். மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் இடைத்தரகர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் மூன்று போட் டோவுடன் கடலூரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வு மாவட்ட அலுவலரை சந்தித்து விண்ணப்பம் பெற வேண் டும். அதனை பூர்த்தி செய்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மருத் துவ குழுவினரிடம் பரிசோதிக்க வேண்டும். பின் னர் அதற்கான சான்று பெற்று மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்தில் பதிவு செய்தவுடன் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior