உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

தபால் அலுவலகத்தில் சேவை குறைபாடு: நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு


கடலூர்:

                 காப்பீடு திட்டத்திற்கு சரியான தொகை வசூலிக்காத தபால் அதிகாரிகள் நஷ்ட ஈடு தொகையாக 6,000 ரூபாய் வழங்க வேண்டுமென நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

                 கடலூர் சிப்காட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சவுரிராஜன். இவரது மகள் சுகுணா. இவர் தபால்துறை அறிமுகப்படுத்திய காப்பீடு திட்டத்தில் சேர முடிவு செய்தார். அதற்காக சிப்காட் தபால் நிலையத்தை அணுகி 50 ஆயிரம் ரூபாய் பாலிசி எடுக்க வேண்டுமென கோரினார்.தபால் அலுவலர் 146 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன்படி சுகுணா விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கடந்த 2006ம் ஆண்டு பிப். 17ம் தேதி பணம் செலுத்தினார். பல நாட்கள் ஆகியும் பாலிசி பத்திரம் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக விசாரித்ததில் பாலிசி பிரிமியம் 153 ரூபாய்க்கு பதில் 146 ரூபாய் செலுத்தப்பட்டது. வித்தியாச தொகை 7 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினார். அதன் படி சுகுணா மீண்டும் அதே ஆண்டு ஜூலை 6ம் தேதி வித்தியாச தொகையை செலுத்தினார்.

                   அதன் பிறகும் பாலிசி பத்திரம் வரவில்லை. அதற்கு பதிலாக தபால் துறை தலைவரிடம் இருந்து அதே ஆண்டு ஆக.27ம் தேதி கடிதம் வந்தது. வித்தியாசத் தொகை 7 ரூபாயை 2006 ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்தாததால் காப்பீடு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுகுணா தபால்துறைக்கு 2006 ஜூன் 3ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என எந்த கடிதமும் வரவில்லை. பாலிசி எடுக்கும் போதே கேட்கப்பட்ட 146 ரூபாய் தான் செலுத்தப்பட்டுள்ளது என சுகுணா கடலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந் தார்.

                   வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி, பாண்டியன் ஆகியோர் தபால் துறை அலுவலர்கள் 2006 ஜூன் 30ம் தேதிக்குள் வித்தியாச தொகை செலுத்த வேண் டும் என அறிவிப்பு செய்யாதது சேவை குறைபாடாகும். இதனால் சுகுணாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நஷ்ட ஈடாக 5,000 ரூபாயும், வழக்கு செலவுக்காக 1,000 ரூபாயும் 2 மாதத் திற்குள் அளிக்க வேண்டும். இந்தத் தொகையை சிப்காட் தபால் நிலைய அதிகாரியும், கடலூர் தபால் கண்காணிப்பாளரும் கூட்டாக அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior