சிதம்பரம்:
கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 4ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது.
சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர் கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் அறிவொளி தலைமையில் நடந்தது. செல்வராஜ் வரவேற்றார். ராமலிங்கம், பாலசுந்தர், ராஜா, தேவநாதன், கிறிஸ்துதாஸ், செந்தில்துரை, செல்வம் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் கணேஷ் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் கடந்த 2008 டிசம் பர் 17ல் சிறப்புத் தேர்வில் பங்கேற்று 90 மதிப்பெண் களுக்கு மேல் பெற்ற 2,000க்கும் மேற்பட்டவர் களை நியமிக்க தேர்வாணைய தலைவரை கேட்டுக் கொள்வது. பணிக்காலங்களில் இறந்த தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஒய்வு பெற்ற ஊழியர்கள் வாரிசுகளுக்கு அரசு வழங்கும் அனைத்து உதவியும் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்டம் பர் 4ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக