உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

பரோலை ஒரு மாதம் நீடிக்க பிரேமானந்தா மனு

கடலூர்:

           தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வழங்கப்பட்டு இருக்கும் பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று பிரேமானந்தா மனு அளித்து உள்ளார்.

               திருச்சி மாவட்டம் விராலிமலையில் ஆசிரமம் நடத்தியபோது அங்கு கற்பழிப்பு மற்றும் கொலையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளில் அவருக்கு இரட்டை ஆயுள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கண் பார்வைக் கோளாறு, பித்தப் பையில் கற்கள், நுரையீரல் வீக்கம், மூச்சுத் திணறல், இதய பலவீனம் உள்ளிட்ட நோய்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

            எனவே அவருக்கு பரோல் வழங்கி, தனியார் மருத்துவமனையில் ஒருமாதம் தங்கி, சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே பிரேமானந்தா கடலூர் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அளித்த பரோல் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னமும் நோய்கள் குணமாகாததாலும், மேலும் சிகிச்சை தேவைப்படுவதாலும்,  பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று கோரி, பிரேமானந்தா தனது வழக்கறிஞர் மூலம், கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு மனு அளித்து உள்ளார்.

                      பிரேமானமந்தாவுக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள பரோல் உத்தரவு, தற்போது பிரேமானந்தா அளித்து இருக்கும் கோரிக்கை மனு ஆகியவற்றை, சிறைத் துறை மூலமாக  தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அரசு உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior