சரியான முகவரியினை தெரிவிக்காத காரணத்தால் நாடு முழுவதும் 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது.
நாடு முழுவதும் செல்போன் சேவை நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரிததவண்ணம் உள்ளன. போட்டியின் காரணமாக 5 ரூபாய் அளவுக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இப்படி சிம்கார்டு விற்பனை செய்வதால் சரியான முகவரியின்றி போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகளை வாங்குவதாகவும் இத்தகைய சிம்கார்டுகள் பயங்கரவாத செயலுக்கு காரணமாக அமையும் என புகார் எழுந்தது.
இதையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னணி செல்போன் சேவைநிறுவனங்களின் தலைவர்கள் மத்திய அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து விரைவில் வாடிக்கையாளர்களின் முகவரிகளை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக