கடலூர்:
கவிஞர் நல்லரசனின் "தை மாசம்' என்ற நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகக் கிராமப் புறங்களில் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில், மறைந்தும் மறையாமல் இருக்கும் 11 நாட்டுப்புறப் பாடல்களை, "தை மாசம்' என்ற தலைப்பில் கவிஞர் நல்லரசன் தொகுத்துள்ளார். இதற்கான குறுந்தகடு வெளியீட்டு விழா கடலூரில், குறுந்தகட்டை நெல்லிக்குப்பம் எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் வெளியிட, முதல் பிரதியை இசையமைப்பாளர் புதுவை சித்தன் செயமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. நகரச் செயலர் ஆனந்த், நா. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ஜெயபாஸ்கரன், ஸ்ரீகாந்த், கடலூர் நகர குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு. மருதவாணன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம். நிஜாமுதீன், அரசு வழக்கறிஞர் கோ. வனராசு, முன்னாள் அரசு வழக்கறிஞர் வேதநாயகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் விடுதலை நம்பி உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சிகளை கவிஞர் பால்கி தொகுத்து வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக