கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்ற, இதுவரை 97.94 கோடி நிதி விடுவிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலைஞர் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்துக்கு 2010-11-ம் ஆண்டில் 26,119 வீடுகள் அனுமதிக்கப்பட்டு அவைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு முதல் தவணையாக |48.97 கோடியும் 2-வது தவணையாக |48.97 கோடியும், தமிழக அரசால் விடுவிக்கப்பட்டு உள்ளது.பெறப்படும் நிதி பயனாளிகளுக்குக் கிடைக்க ஏதுவாக, ஊராட்சிகளுக்கு உடனே விடுவிக்கப்படும்.
கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் 2010-11-ம் ஆண்டுக்கான வீடுகள் அனைத்தையும் விரைந்து கட்டி முடிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பயனாளிகள் தொய்வின்றிக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக