உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 26, 2010

தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

சிதம்பரம் : 

                  சிதம்பரம் பஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பஸ்கள் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்துவதால்  பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தக் கட்டைக்கு எதிரே மேல் கூரையில் ஊர் பெயர் எழுதப்பட்டு அந்தந்த கட்டைகளில் பஸ்கள் நிறுத்த வேண்டும். சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்ட இவ்வசதியை டிரைவர்கள் பின்பற்றுவதில்லை.

                      அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டைகளில் பஸ்சை நிறுத்தாமல் பஸ் நிலையத்தில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பஸ், எங்கு நிற்கிறது என தெரியாமல் பயணிகள் பஸ் நிலையம் முழுவதும் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. பஸ்களை முறையாக ஒதுக்கப்பட்ட அந்தந்த ஊர் கட்டைகளில் நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியும் கூட டிரைவர்கள் பின்பற்றுவதில்லை. 

                   குறிப்பாக கடலூர், காட்டுமன்னார் கோவில், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் எப்போதும் தாறுமாறாகவே நிற்கிறது. பயணிகள் அவதியை தவிர்க்கவும், எளிதாக பஸ் ஏறவும் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior