நெய்வேலி:
என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களில் தொமுச தவிர்த்த இதர 8 தொழிற்சங்கங்கள் என்எல்சி நிர்வாகத்திடம் திங்கள்கிழமை ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியுள்ளன.
சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 35 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளன. அதன்படி அதிமுக தொழிற்சங்கம், ஹிந்து மஸ்தூர் சபா, பாரதிய மஸ்தூர் சங்கம், பாமக, தேமுதிக தொழிற்சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்புக் கடிதத்தை நிர்வாகத்துறை துணைப் பொதுமேலாளர் பெரியசாமியிடம் வழங்கியுள்ளன.
இதையடுத்து 15 நாள்கள் கழித்து மேற்கண்ட தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட நேரிடும். என்எல்சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் பாமக தொழிற்சங்கமும், அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களும் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுச ஸ்டிரைக் நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக