கடலூர்:
விடுதி மாணவிகளே துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர் என்று, கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை விளக்கம் அளித்து உள்ளார். 22-10-2010 தினமணியில் இப்பள்ளியில் மாணவிகள் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட புகைப்படம் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை வெளியிட்ட விளக்கக் கடிதம்:
எங்கள் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சாரணியர் இயக்கம், தேசிய பசுமைப்படை, சாலைப் பாதுகாப்பு அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், செஞ்சுருள் இயக்கம், மாதிரிப் நாடாளுமன்றம் போன்ற அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சமூகசேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகள் குறித்து மாணவிகளுக்குக் கற்பித்து வருகிறோம்.
உள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்ளவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும், தாங்கள் தங்கி இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து இருக்கவும், சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விடுதி மாணவிகள் அவர்களின் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது என்று, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக