உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

சேவை நோக்குடைய அரசு வங்கிகள் இல்லை குமராட்சி பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் : 

                   குமராட்சி பகுதியில் மக்களுக்கு சேவை நோக்குடன் செயல்படுவதற்கான அரசு வங்கிகள் இல்லாததால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குமராட்சி பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வியாபாரிகள், விவசாயிகள்  அதிகளவில் உள்ளனர். இவர்களின் தேவையை போக்க சேவை நோக்குடைய அரசு வங்கிகள் குமராட்சியில் இல்லை. அதனால் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என அனைத்து தரப்பினரும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குமராட்சியில் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி அரசு வங்கிகளை திறக்க வேண்டும். 

இதுபற்றி வர்த்தக சங்கத் தலைவர் தமிழ்வாணன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

                      குமராட்சி பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். ஆனால் அதற் கேற்ப வங்கிகள் இல்லாததால் விவசாயிகள், பொதுமக் கள் பணத்தை சேமிக்க முடியாமலும், வங்கி மூலம் அரசு திட்டங்களை பெறுவதற்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். குமராட்சி பகுதியைச் சுற்றி குமராட்சி, கீழக் கரை, நந்திமங்கலம், அத் திப்பட்டு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

                        இப்பகுதி மக்கள் தொழில் துவங்கவும், விவசாயிகள் கடன் வாங்கி பயிர் செய்யவும், மாணவர்கள் கல்வி கடன் பெற முடியாமலும் தவிக்கின்றனர். தற்போது செயல்படும் தனியார் வங்கி நகை அடகு வைக்கும் வட் டிக்கடையாக மட்டுமே இருப்பதால் மக்களின் வாழ்க் கைத்தரம் முன் னேற்றம் அடையாமல் உள்ளது. அவ்வங்கியால் மக்களுக்கு சேவை கிடைக்கவில்லை. குமராட்சி மக்கள் தேவையை பூர்த்தி செய் யவும், வாழ்க்கை தரம் உயர்த்தவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior