உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா வழங்காமல் அலைக்கழிப்பு

சிதம்பரம்:

                காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா விண்ணப்பத்தவர்களுக்கு சிட்டா வழங்கப்படாமல் அலைகழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் உரம், விதை மற்றும் ஜிப்சம் உப்பு மற்றும் வங்கிகளில் பயிர்கடன், பயிர் காப்பீடு ஆகியவை பெற சிட்டா அடங்கல் விவசாயிகளுக்கு அவசியம் தேவை. தற்போது விவசாயிகளுக்கு  20 பணம் செலுத்தினால் கணினி சிட்டா வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

               காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கணினி சிட்டா கோரி பல மாதங்கள் ஆகியும் சிட்டா- அடங்கல் வழங்கப்படவில்லை. இதுகுறித்து வட்டாட்சியரை தொடர்பு கொண்டு கேட்ட போது கணினி பழுதடைந்துள்ளது என பலமாதங்களாக ஒரே பதிலையே தொடர்ந்து கூறி வருகிறார். காட்டுமன்னார்கோவில் வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த கே. முத்துக்குமரன் என்ற விவசாயிக்கு குறைந்த விஸ்தீரணத்தில் சிட்டா அடங்கல் வழங்கியுள்ளனர். 

                     இவர் இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு மூலம் முறையிட்டார். கோட்டாட்சியர் அ. ராமராஜூ விசாரணை மேற்கொண்டு அவரது உண்மையான நில விவரங்கள் குறித்து ஆய்வு செய்து விடுபட்ட விஸ்திரணத்தை சேர்த்து திருத்தி சிட்டா- அடங்கல் வழங்க 27-7-2010-ல் உத்தரவிட்டார். 2 மாதங்களுக்கு மேலாகியும் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் சிட்டா- அடங்கல் வழங்கவில்லை.

                              துகுறித்து அவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். முதல்வர் தனிப்பிரிவிலிருந்து அவருக்கு உடனடியாக சிட்டா- அடங்கல் வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு 3-9-2010-ல் கடிதம் அனுப்பியுள்ளது. இருந்தும் இதுவரை பலனும் இல்லை என்கிறார் விவசாயி முத்துக்குமரன்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி எஸ். நடராஜன் கூறியது 

                   "கணினி சிட்டா வழங்குவது குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளது. விவசாயிகளுக்கு உடனடியாக கணினி சிட்டா வழங்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா வழங்கப்படாதது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior