உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

சென்னை - திருச்சி விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லும்

கடலூர் : 

                     சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

                       சென்னை - மயிலாடுதுறை வழியாக கடந்த ஏப்., 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. மே முதல் தேதி முதல் இயக்கப்படும் சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூரில் நிற்பதில்லை. இதனால் ரயில் பயணிகள், மக்கள் பிரதிநிதிகள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வலியுறுத்தி வந்தனர். நகர் நலச்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இதன் பயனாக தற்போது சோழன் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளது.

இது பற்றி திருச்சி ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                        திருச்சி - சென்னை எழும்பூர் விரைவு ரயிலுக்கு சோதனை அடிப்படையில் 6 மாத காலத்திற்கு கீழ்கண்ட ஊர்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும் இந்த நிறுத்தங்கள் 1.11.2010 முதல் 30.04.2011 வரை அமலில் இருக்கும். திருச்சியில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 6854) பூதலூருக்கு 9.41க்கு வரும். மீண்டும் 9.42க்கு புறப்படும்.

                        வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 11.16 - 11.17, திருப்பாதிரிப்புலியூருக்கு 12.43 வந்தடைந்து 12.45க்கு புறப்படும். பண்ருட்டியில் 1.08 - 1.09, தாம்பரம் 4.28 - 4.30 ஆகிய இடங்களில் நின்று செல்லும். எதிர்மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில் (எண் 6853) எழும்பூரில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தில் காலை 8.43 - 8.45 மணிக்கும், பண்ருட்டியில் 11.39 -11.40 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூர் 12.15 - 12.17 மணிக்கும், வைத்தீஸ்வரன் கோவிலில் 1.21 - 1.22 மணிக்கும், பூதலூர் 3.08 - 3.09 மணிக்கும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior