உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

தமிழக அரசின் ஆன்-லைன் சேவைகளுக்கு வரவேற்பு இல்லை

                   ஆன்-லைன் வழியே ஜாதிச் சான்றிதழ் வழங்குவது போன்ற அரசின் சேவைகள் மக்களிடம் சென்றடையவில்லை. இதனால், இந்தச் சேவை குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையும் முறை அமலில் உள்ளது. 

                    இந்த நிலையில், வருவாய்த் துறையைச் சார்ந்த பணிகளான ஜாதிச் சான்றிதழ், வருமான வரிச் சான்றிதழ், ஆதரவற்ற பெண்களுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல், பட்டதாரியில்லா குடும்பம் எனும் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.  இதனால், வட்டாட்சியர் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. திட்டம் தொடக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இதுவரை 15 பேர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விழிப்புணர்வு பிரசாரம்:

                  "ஆன்-லைன் மூலம் அரசு சேவைகளைப் பெறலாம்' என்று பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு அதன் பிறகு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.   இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் ஆன்-லைன் மூலம் அரசு சேவைகள் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.   இந்த மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior