உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோரும் உதவித் தொகை பெறுவது எப்படி?

                பத்தாம் வகுப்பு (பள்ளி இறுதி) தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகையை எப்படி பெறுவது என்ற  விளக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 

               9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 10-ம் வகுப்பு இறுதித் தேர்வில் கலந்து கொண்டு தோல்வி அடைந்தவர்களாக இருந்தாலும், கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம்.இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதி திராவிடர், பழங்குடியினர் பயனாளிகளைப் பெறுத்தவரை அதிகபட்ச வயது வரம்பு 45. இதர வகை பயனாளிகளுக்கு வயது வரம்பு 40. பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

                அரசு நிறுவனங்களிலோ அல்லது எந்தவொரு தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிபவராக பயனாளி இருக்கக் கூடாது. சுய தொழிலிலும் ஈடுபடக் கூடாது.பயனாளி பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருப்பது அவசியம். அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் பயனாளி தனது சேமிப்புக் கணக்கை பராமரித்து வர வேண்டும். 

                     அந்தக் கணக்கில் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 100 வீதம் உதவித் தொகையாக 3 ஆண்டுகளுக்கு, இதர நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள், பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாத பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்து சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளும்படி வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior