உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

நரியன் ஓடை பாலம் இடிந்து விழும் முன் நடவடிக்கை தேவை

நடுவீரப்பட்டு : 

                 நடுவீரப்பட்டு - சி.என். பாளையம் நரியன் ஓடையில் உள்ள சிறிய பாலம் உடையும் அபாய நிலை உள்ளது.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என். பாளையம் நரியன் ஓடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பொது நிதியில் சிறிய உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.

                இந்த பாலத்தை நடுவீரப்பட்டு ஊராட்சியை சேர்ந்த தெற்கு தெரு, மற்றும் சி.என்.பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பழையபாளையம், கச்சிராயர்குப்பம், புத்திரன்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்  நடுவீரப்பட்டு வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.

                  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நரியன்  ஓடையை ஆழப்படுத்த கூறி அதிகாரிகள் பொக்லைன் மூலம் வாய்க்காலில் பள்ளம் தோண்டி பரவலாக ஓடிய மழை நீரை 10 அடி அகலத்திற்கு மட்டும் தண்ணீர் ஓடக்கூடிய அளவிற்க்கு வாய்க்கால் வெட்டினர். இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த பாலத்தின் பில்லர்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சிறிது மண்ணில் புதைந்தது. இதனால் பாலத்தில் தொய்வு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது.

                 பாலத்தின் கைப்பிடி கம்பிகளை சமூக விரோதிகள் திருடிச் சென்று விட்டதால் இரவு நேரத்தில் நடக்க முடியாமல் பலர் ஓடையில் விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது.  இப்பாலம் தொடர்ந்து பெய்து வரும் கன மழையில் உள்வாங்கி உள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior