உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளுக்கு கூடுதல் மண்ணெண்ணெய்: கலெக்டர்

சிதம்பரம் : 

              கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு கூடுதலாக 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். 

                 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை கலெக்டர் சீத்தாராமன் நேற்று பார்வையிட்டார். பின்னர் வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சிதம்பரத்தில் ஆலோசனை நடத்தினார். சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட கரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக ஒலிப்பெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

                 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்க 170 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மட்டும் 131 டன் அரிசி டன் வழங்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் சூழ்ந்துள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு கூடுதலாக குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திற்கு 60 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் பெறப்பட்டு உடனடியாக வழங்கப்பட உள்ளது.

மேலும், 

சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர் பகுதிக்கு மாவட்ட பிற்பட்ட நல அலுவலர் கணபதி (எண்- 9842723080), 

பரங்கிப்பேட்டை, புவனகிரி, திருவக்குளம் பகுதிக்கு சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ் (எண்- 9445000425), 

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உடையார்குடி, புத்தூர், குமராட்சி ஆகிய பகுதிக்கு உதவி ஆணையர் கலால்  கேசவமூர்த்தி (எண்-  9842405631), 

காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) உமாபதி (எண்- 9444564037) 

                  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து உடனுக் குடன் அவர்களை தொடர்பு  கொண்டு தகவல் தெரிவிக்கலாம்என கலெக்டர் சீத்தாராமன் தெரி வித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior