
பண்ருட்டி :
பண்ருட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மணல் எடுக்க முடியாமல் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. ஆனால், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, மலட்டாறுகளில் தொடர்ந்து இரவில் டிப்பர் லாரிகளில் மணல் திருட்டு நடந்தது.
எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.எஸ்.பி., பிரசன்னகுமார் உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் எனதிரிமங்கலம், கொரத்தி மாரியம்மன் கோவில் அருகில், வரிஞ்சிப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் பிடாகம் அய்யப்பன், வரிஞ்சிப்பாக்கம் ராஜேந்திரன்(37), கண்டரக்கோட்டை பாண்டியன்(26) ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக