உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்: டிசம்பர் 7 முதல் அடையாள அட்டைகள்

                 கலைஞர் வீடு வழங்கும் திட்டப் பயனாளிகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி முதல் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.குடிசைகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகளைக் கட்டும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

                 மாவட்ட வாரியாக இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் | 75 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசினார், காங்கிரஸ் கட்சிக் கொறடா பீட்டர் அல்போன்ஸ். அப்போது, ""கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

                           இதற்குப் பதிலளித்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ""டிசம்பர் 2-வது வாரத்துக்குள் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும்'' என்றார் .

டிசம்பர் 7-ம் தேதி முதல்: 

               இந்த நிலையில், அடையாள அட்டைகள் டிசம்பர் 7-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்குவர். டிசம்பருக்குள் 3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குள் 21 லட்சம் குடிசைகள் வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior