உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

வெள்ளநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி செலவில் வெள்ளத் தடுப்புப் பணிகள்

சிதம்பரம்:

               ரூ. 15 கோடி செலவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றின் கரையை பலப்படுத்தி வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என பொதுப்பணித்துறை கொள்ளிட வடிநில கோட்ட செயற் பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கொள்ளிட வடிநில கோட்ட செயற் பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது:

              வெள்ளநீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ. 6.8 கோடி செலவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து தாதம்பேட்டை வரை வெள்ளாற்றின் இடதுகரையும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து சக்திவிளாகம் வரை வலதுகரை பலப்படுத்தப்படுகிறது. மேலும் சாக்காங்குடி பகுதியில் வெள்ளாற்றில் குறுக்கே 6 தடுப்புச் சுவர்களும்,  மேல்புவனகிரி பகுதியில் 5 தடுப்புச் சுவர்களும், தீர்த்தம்பாளையத்தில் 4 சுவர்களும், மடுவங்கரையில் 4 தடுப்புச் சுவர்களும் ஆக மொத்தம் வெள்ளாற்றின் 27 தடுப்புச் சுவர்கள் ரூ. 4.96 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.     

                    மேலும் ரூ. 1.3 கோடி செலவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் மண் அரிப்பை தடுக்க 130 மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவரும், புவனகிரி வலதுகரையில் ரூ. 66 லட்சம் செலவில் 70 மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவரும் அமைக்கப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டின்கீழ் வெள்ளாறு பகுதியில் ரூ. 59 லட்சம் செலவில் 9 வடிகால் மதகுகள் அமைக்கப்படவுள்ளது. ஆக மொத்தம் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க ரூ. 15 கோடி செலவில் திட்டப் பணிகள் தொடங்க ஜனவரி மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் மார்ச் 2012-ல் முடிவுறும் என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

                  இவையல்லமால் ரூ. 6.8 கோடி செலவில் வாலாஜா ஏரியிலிருந்து பொன்னேரி வரை வெள்ளப் பெருக்கில் உடைப்பெடுத்த மத்திய பரவனாறு கரையை 9.4 கி.மீ. தூரத்துக்கு  15 அடி அகலத்துக்கும், 16 அடி உயரத்துக்கு பலப்படுத்தி தூர்வாரி 180 அடியாக அகலப்படுத்துவது. 24 மதகுகள் கட்டவும் திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.  இதன் மூலம் இதுவரை 15 ஆயிரம் கனஅடி கொள்ளளவு 25 ஆயிரம் கனஅடி கொள்ளளவாக உயர்ரத்தப்படும் என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior