பண்ருட்டி :
திருட்டு சம்பவம் குறித்து நிலைய அலுவலர் வழக்குப்பதிவு செய்யவில்லையெனில் டி.எஸ்.பி., அல்லது என்னிடம் முறையிட்டால் உடன் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., தெரிவித்தார். பண்ருட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் கூறியது:
பின்னர் எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் கூறியது:
கடந்த 2001ம் ஆண்டு முதல் மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளது. பண்ருட்டி சப் டிவிஷனில் கடந்த 2001ம் ஆண்டு 91 குற்ற வழக்குகள் பதிவானது. ஆனால் கடந்த 2009ல் 83 வழக்கும், 2010ல் 43 வழக்கும் பதிவாகியுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து நிலைய அலுவலர் வழக்குப்பதிவு செய்யவில்லையெனில் டி.எஸ்.பி., அல்லது என்னிடம் முறையிட்டால் உடன் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக தமிழக போலீஸ் செயல்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் பொதுமக்கள் புகார்கள் குறித்து உடன் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். நகை அடகுகாரரிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நகைகள் கிடைக்க குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பழைய 7 குற்றங்களில் குற்றவாளிகள் பிடிக்கவும், நகரத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க கூடுதலாக 10 போலீசார் மற்றும் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார். டி.எஸ்.பி., பிரசன்னகுமார், பயிற்சி டி.எஸ்.பி., கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக