உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

காய்கறிகள் சாகுபடியில் வேரைப் பாதுகாத்தால் விளைச்சல் அதிகரிக்கும்


தேங்காய் நாரில் இருந்து தயாரிக்கப்படும் உரம்.
                  
              விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை. விவசாயிகள் இப்படிதான் பேசிக் கொள்கிறார்கள். ஒரு சில தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து லாபம் ஈட்ட முடியும்.  மனிதனுக்கு இதயம், நுரையீரல் எப்படி முக்கியமோ பயிருக்கு அந்த அளவு வேர் முக்கியம். வேர் திடமாக இருந்தால்தான் பயிர் செழித்து வளரும்.  மனிதன் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்ப்பன்- டை-ஆஆக்சைடை வெளியிடுகிறான். பயிர்களின் வேர் கார்ப்பன்-டை- ஆக்சைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வேர் வலிமையாக இருந்தால்தான் சுவாசிக்கும் திறன் நன்றாக இருக்கும்.  
 
வேரைப் பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:  
 
               வேர் வலிமையாக இருக்க அங்ககப் பொருள்களை அதிகமாகப் பயிர்களில் பயன்படுத்த வேண்டும். வேர் சுவாசம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக வேர் கிளைக்கும். அதிகமான கிளைப்பு காரணமாக மகசூல் அதிகரிக்கும்.  ஆடி, தை ஆகிய 2 பட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகளுக்குத் தொழு உரத்துக்குப் பதிலாக தேங்காய்நார் கழிவு உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அங்ககக் கரிமசத்து இதில் அதிகமாக இருக்கிறது. இந்த உரத்தைப் பயன்படுத்தினால் வேர் திடமாக இருக்கும்.  
 
                     கிளைப்பு நிறைய வரும். சுவாசம் நன்றாக இருக்கும். ஈரம் காக்கும் தன்மையும் கூடவே கைக்கூடும். மேலும் நன்மை தரும் நுண்கிருமிகள் வேர்ப்பகுதியில் எண்ணிக்கையில் அதிகமாகப் பெருகும். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, கீரைவகைகள் மற்றும் தோட்டப் பயிர்களான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி ஆகிய பயிர்களுக்கு தேங்காய் நார் உரத்தைப் பயன்படுத்தலாம்.  
 
                    எந்தப் பயிராக இருந்தாலும் வேர்ப் பகுதியில் ஓர் ஏக்கருக்கு 80 முதல் 100 கிலோ வரை வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும். வேப்பம்புண்ணாக்கில் அசாடி ரக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கசப்புத்தன்மை இருக்கிறது.  இத்தன்மை காரணமாக வேரில் அழுகல் நோய், வேர் வாடல் நோய், வேரைத் தாக்கும் நூல் புழு வராமல் தடுக்க முடியும். இந்தப் புண்ணாக்கு நோயை உருவாக்கும் கிருமிகளை விரட்டி வேரைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior