உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், பிப்ரவரி 03, 2011

பிச்சாவரம் சுற்றுலாப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

சிதம்பரம்:

           சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சுற்றுலாப் பகுதியில் இளைஞர் செஞ்சிலுவை அமைப்பு மாணவர்களால் சுரபுண்ணை காடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனர்.

             கிள்ளை பேரூராட்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை அமைப்பு ஆகியன இணைந்து இந்த பிரசாரத்தை மேற்கொண்டது.தமிழகத்தில் உள்ள 7 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளைஞர் செஞ்சிலுவை அமைப்பு மாணவ, மாணவியர்கள் 7-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று பிச்சாவரம் வனப்பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள சுரபுண்ணை காடுகளில் மக்களால் போடப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

             பின்னர் அங்கு வந்து சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருள்களை நீரில் வீசக் கூடாது என பிரசாரம் செய்தனர். கோட்டாட்சியர் எம்.இந்துமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செஞ்சிலுவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.வி.பாலமுருகன் வரவேற்றார்.லயன் கே.சேதுமாதவன், அரிமா சங்க பொருளர் டி.கே.விஜய்காந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திட்ட அலுவலர் ஆர்.பாலமுருகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior