சிதம்பரம்:
சிதம்பரம் தெற்குசன்னதி தொலைபேசி நிலைய வளாகத்தில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது
.திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் (விஜிலென்ஸ்) பி.மகேஷ் திறந்து வைத்தார். சிதம்பரம் கோட்டப் பொறியாளர் கே.இளங்கோவன் சேவை மையத்தை பற்றி விளக்கமளித்தார். கோட்ட பொறியாளர் ஏ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். இச்சேவை மையத்தில் கோவில் தொலைபேசி நிலையம், அண்ணாமலைநகர், சக்திநகர், வல்லம்படுகை ஆகிய தொலைபேசி நிலையங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகள் குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
புதிய தரைவழி இணைப்புகள், செல்போன் சேவை இணைப்புகள், எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் ஆபரேட்டர் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வது, மொபைல் ரீசார்ஜ், ஈ சார்ஜ் கார்டுகளும், ஐடிசி கார்டுகளும் இச்சேவை மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும் சேவை மையத்தில் தரைவழி தொலைபேசி, வில் தொலைபேசி. செல்போன் கட்டணங்களும் செலுத்தலாம் என கோட்டப் பொறியாளர் கே.இளங்கோவன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக