உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

2011 தமிழக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயார்

               உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

              மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமும், கிராமப் பகுதிகளில் ஓட்டுச்சீட்டு மூலமும் வாக்குப்பதிவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்னணு எந்திரங்களை மத்திய தேர்தல் கமிஷன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  ஓட்டுச்சீட்டுகள் அச்சடிப்பதற்கான முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடிகளை உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதவிர வார்டு தேர்தலை கருத்தில் கொண்டு சிறிய கிராமங்களிலும் வாக்குச் சாவடி அமைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

             2001-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. வார்டு தேர்தல் நடத்துவதற்கு ஏற்ப, உள்ளாட்சி தேர்தல் பட்டியல் தயாராகி உள்ளது.

                    மாநகராட்சி, நகர பஞ்சாயத்து தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கும் முறை தற்போது உள்ளது. மீண்டும் மேயர், நகராட்சி தலைவர், நகர பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கான சட்டதிருத்தம் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

             அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்-டாப், கறவை மாடுகள் வழங்குவது போன்ற இலவச திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கும் என மாநில தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior