உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி விடுதியை சீரமைக்க வேண்டுகோள்

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து விருத்தாசலம் எம்.எல்.ஏ., முத்துகுமார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதம்: 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்கள் 150 பேர் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் உள்ள 5 கழிவறைகளில் ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. குளியல் அறைகள் பழுதடைந்து பயனற்று உள்ளன. மின்சார சாதனங்கள் உடைந்து தொங்குவதால் மாணவர்களுக்கு ஆபத்து உண்டாகும் நிலை உள்ளது. குடிநீர் குழாய்கள் இரும்பில் உள்ளதால் துரு பிடித்து அதிலிருந்து வரும் தண்ணீரை குடிப்பதால் மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்படுகிறது. 

                விடுதியில் நிலவும் இதுபோன்ற குறைகளை நீக்கி சீரமைக்க வேண்டும் என்று எனக்கு மனுஅளித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுதியை சீரமைக்கவும், மாணவர்களின் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்துகுமார் எம்.எல்.ஏ., தனது கடிதத்தில் தெரிவித்துள் ளார்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior