கடலூர்:
கடலூர் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியின் சார்பில் அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியது:-
நடப்பாண்டு தமிழக பட்ஜெட்டில் 3445 கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. ஆனால் கடந்த 2000-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை விட்டு சென்றபோது கஜானாவில் இருப்பு வைத்து சென்றார். முந்தைய தி.மு.க. ஆட்சியில் கஜானா முழுவதும் காலி செய்ததோடு கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பட்ஜெட்டில் நாட்டின் முதுகெலும்பான விவசாய நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் உலக அரங்கில் பேசக்கூடிய திட்டமாகும். இந்த திட்டத்தால் மாணவர் வேலைவாய்ப்பு, பொது அறிவு தெரிவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய திட்டமாகும்.
அடுத்த கட்டமாக இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்துக்காக ரூ.1250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள். அதேபோல் பள்ளி குழந்தைகள் முதல் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக தொலை நோக்கு பார்வையோடு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 1/2 பவுன் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவிகுழுவுக்கு ரூ.25 லட்சம் சுழல் நிதி, திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி திட்டம் என எண்ணற்ற திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தந்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் ரூ.36 கோடி செலவில் 12 ஆயிரம் பேருக்கு கரவை மாடுகளும், ரூ.134 கோடியில் ஒரு லட்சம் குடும்பத்துக்கு 4 ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் 30 சதவீத ஆதிதிராவிடர் மக்கள் பயனடைவார்கள். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்க சோலார் எனர்ஜி என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற பல திட்டங்களுடன் தலை சிறந்த பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி வரை அனைத்தும் அ.தி.மு.க.வுக்கே சொந்தம் என்ற சபதத்தோடு வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக