உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

செல்போனில் இலவச போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்

சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா  கூறியது:-  

              சென்னை போக்குவரத்து போலீஸ் துறை வாகன ஒட்டிகளுக்காக அன்றாட போக்குவரத்து நிலைமை குறித்த இலவச எஸ்.எம்.எஸ். சேவையை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சேவையை சென்னையை சேர்ந்த ஸ்டால் வார்ட் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து செய்கிறது.

                இந்த சேவையில் சேரும் பொதுமக்களுக்கு தினமும் போக்குவரத்து தகவல் அனுப்பப்படும். இந்த சேவையை பெற விரும்புபவர்கள் JOIN CTP என டைப் செய்து 09219592195 என்ற எண் ணுக்கு ஒரு எஸ்,.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அதன் பிறகு இந்த சேவையில் பயன் பெறலாம்.  அன்றாட வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து நிலைமையினை அறிந்து கொள்வதற்கும் அதற்கேற்றவாறு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற் கான பாதையை தெரிந்து கொள்வதற்கும் இந்த வசதி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த சேவை முழுவதும் இலவசமாகும். கட்டணம் எதுவும் கிடையாது.

              முதலில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.க்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேவையில் உள்ள பொதுமக்கள் இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அவர்களது செல்போனில் இருந்து LEAVE CTP என டைப்செய்து 09219592195 என்ற எண்ணுக்கு எஸ். எம்.எஸ். அனுப்ப வேண் டும். மேலும் இந்த சேவையை www.smsgupshup.com என்ற இணையத்திலும் தெரிந்து கொள்ளலாம்.  

              இரு சக்கர வாகனத்தில் உள்ள நம்பர் போர்டுகளில் அரசியல் தலைவர்கள் படம், எழுத்துக்களை பெரிதாகவும், சிறியதாகவும் எழுதி பயன்படுத்துவதாக ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஜூலை மாதத்தில் மட்டும் 16 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இ. செலான் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையில் ஒரு நாளைக்கு சராசரி 3800 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 42 ஆயிரம் பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

              பைக் பந்தயத்தில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 12 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior